பிரபல பட்டிமன்ற பேச்சாளர், இன்ஸ்டா பிரபலம் ராஜஸ்ரீ ஜெய்சன் காலமானார்: ரசிகர்கள் அஞ்சலி!

 
insta

புற்றுநோய் பாதிப்புடன் தைரியமாகப் போராடி, தனது நேர்மறையான எண்ணங்களால் லட்சக்கணக்கான சமூக வலைதளப் பயனர்களுக்கு ஊக்கமளித்து வந்த பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ராஜஸ்ரீ ஜெய்சன் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

ராஜஸ்ரீ ஜெய்சன் கொடூரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போதிலும், அதனைக் கண்டு சோர்வடையாமல் மிகுந்த மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டார். தான் சந்தித்த கடினமான மருத்துவ சிகிச்சைகள், வலியைக் கடந்து வாழும் கலை மற்றும் மனரீதியாக தைரியமாக இருப்பது எவ்வாறு என்பது குறித்த தனது சொந்த அனுபவங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களாகப் பகிர்ந்து வந்தார்.

இன்ஸ்டா ராஜ்யஸ்ரீ

இவரது வீடியோக்களும், வாழ்க்கையை நேர்மறையாக அணுகும் விதமும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றிப் பல்வேறு தரப்பட்ட சமூக வலைதளப் பயனர்களுக்கும் பெரும் தன்னம்பிக்கையையும் வழிகாட்டுதலையும் அளித்து வந்தது. கடந்த சில நாட்களாகத் தீவிர மருத்துவச் சிகிச்சையில் இருந்து வந்த ராஜஸ்ரீ ஜெய்சன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இவரது மறைவுச் செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவரது இன்ஸ்டா பக்கத்தைப் பின்தொடர்பவர்கள், சக இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் அஞ்சலியையும் தெரிவித்து வருகின்றனர். 'துணிச்சலான பெண்மணியை இழந்து விட்டோம்' எனப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.