இன்ஸ்டாகிராமில் ஆபாச, வன்முறை பதிவுகளுக்குத் தடை? அல்காரிதத்தில் அதிரடி மாற்றம் செய்த மெட்டா!

 
மெட்டா

 

இன்ஸ்டாகிராமில் பாலியல் ரீதியாகத் தூண்டும் மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் பதிவுகள் பரிந்துரைக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், மெட்டா நிறுவனம் தனது அல்காரிதத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஆபாச மற்றும் வன்முறை உள்ளடக்கங்கள் பயனாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதை ஏற்று, இன்ஸ்டாகிராமின் பரிந்துரை முறையில் மெட்டா மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது.

இதன்படி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு பதிவும் முன்கூட்டியே ஆய்வு செய்யப்படுகிறது. விதிமுறைகளுக்குப் புறம்பான மற்றும் தேவையற்ற பதிவுகள் பயனாளர்களின் ஃபீடில் தோன்றுவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

Meta fixes massive AI assistant vulnerability after hackers seize Instagram accounts

இந்த நடவடிக்கையின் மூலம், கடந்த ஓராண்டில் பாதுகாப்பு தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.