செம மாஸ்... இனி Instagram Reels டவுன்லோடு செய்யாமல் WhatsApp-ல் அனுப்பலாம்.. Meta புதிய வசதி
WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு பயனுள்ள புதிய வசதியை Meta நிறுவனம் சோதித்து வருகிறது. Instagram மற்றும் Facebook-ல் ஏற்கனவே பதிவிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் Reels-ஐ WhatsApp-ல் நேரடியாகத் தேர்வு செய்து பகிரும் வசதிதான் அது.தற்போது Instagram-ல் இருக்கும் ஒரு Reel-ஐ WhatsApp-ல் பகிர வேண்டுமென்றால், அந்த Reel-ன் Link-ஐ அனுப்ப வேண்டும் அல்லது வீடியோவை தனியாக பதிவிறக்கம் செய்து பின்னர் WhatsApp-ல் பகிர வேண்டும். புதிய வசதி அறிமுகமானால் இந்த நடைமுறை மேலும் எளிதாகும்.
இதற்காக Instagram மற்றும் Facebook கணக்குகளை WhatsApp-ன் ‘Accounts Center’ மூலம் இணைக்க வேண்டும். கணக்குகள் இணைக்கப்பட்ட பின்னர், WhatsApp-ல் புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்வு செய்யும் பகுதியில் Instagram மற்றும் Facebook-ல் ஏற்கனவே பதிவிட்டுள்ள Media-க்களையும் அணுக முடியும்.
அங்கிருந்து தேவையான புகைப்படம், வீடியோ அல்லது Reel-ஐ தேர்வு செய்து WhatsApp Chat-ல் நண்பர்களுக்கு அனுப்பலாம். அதேபோல் WhatsApp Status-ஆகவும் பகிர முடியும். இதனால் ஒரே வீடியோவை மீண்டும் Download செய்து WhatsApp-ல் Upload செய்ய வேண்டிய அவசியம் குறையும்.
இந்த வசதி தற்போது குறிப்பிட்ட Beta பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. Android மற்றும் iOS தளங்களில் சில Beta பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல பயனர்களுக்கு படிப்படியாக இந்த வசதி விரிவுபடுத்தப்படலாம்.
எனவே, இந்த வசதி தற்போது அனைத்து WhatsApp பயனர்களுக்கும் பொதுவாக கிடைக்கிறது என்று கூற முடியாது. சோதனை முடிந்த பிறகு Meta நிறுவனம் இதை பரவலாக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.Instagram, Facebook, WhatsApp ஆகிய மூன்று தளங்களையும் ஒருங்கிணைக்கும் Meta-வின் முயற்சிகளில் இந்த புதிய வசதியும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
