"தவெகவுக்கு தென்மாவட்டங்களில் பலத்த அடி விழும்” - உளவுத்துறை எச்சரிக்கையால் பரபரப்பு!

 
தேவர்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், வரவிருக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் நேரில் பங்கேற்க வேண்டும் என உளவுத்துறை முக்கிய அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவர்

உளவுத்துறை அளித்துள்ள அந்த அறிக்கையில், தென் மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கையும் வாக்கு வங்கியையும் வலுவாகத் தக்கவைத்துக்கொள்ள தேவர் குருபூஜையில் விஜய் பங்கேற்பது மிகவும் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இதில் பங்கேற்கத் தவறினால், தென் மாவட்டங்களில் தவெகவுக்கு பலத்த அரசியல் அடி விழக்கூடும் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.

தேவர் குருபூஜை

அதேவேளையில், கட்சித் தலைமையின் தொடர்ச்சியான கடைசி நேர முடிவுகளால் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வரவிருக்கும் தேவர் குருபூஜை நிகழ்வில் விஜய் கலந்து கொள்வாரா அல்லது தவிர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த நகர்வு விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியச் சோதனையாகவும் பரீட்சையாகவும் மாறியுள்ளது.