வெள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட முதியவர்... பகீர் வீடியோ!
மகாராஷ்டிர மாநிலம் கோரேகாவ் மூல் தடுப்பணைப் பகுதியில் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பாலத்தைக் கடக்க முயன்ற முதியவர் ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், வெள்ளத்தில் மூழ்கிய முதியவரைத் தேடும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
#Hyderabad:#Elderlyman missing after allegedly falling into open #manhole in #Miyapur
— NewsMeter (@NewsMeter_In) July 29, 2026
A 70-year-old man, Balayya, a resident of #PremNagar , #Hafeezpet, went missing after allegedly falling into an uncovered manhole near the #VaishaliNagar #RailwayUnderpass in Miyapur during… pic.twitter.com/AkELQATIKE
வெள்ள நீர் பாலத்திற்கு மேலாக ஆபத்தான முறையில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த வேளையில், அந்த முதியவர் தனது இருசக்கர வாகனத்துடன் அதைக் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது நீரின் வேகம் அதிகரித்து, கட்டுப்பாட்டை இழந்த அவர் வாகனத்தோடு சேர்த்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கும் அவசர உதவி எண்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தற்போது சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளப்பெருக்கு காலங்களில் பொதுமக்கள் ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கும், நீர் வழிந்தோடும் பாலங்களுக்கும் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
