அதிரடி உத்தரவு... 'சங்கீத கலாநிதி' விருது பெயரை பயன்படுத்த இடைக்கால தடை!
எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்திருந்தார்.
மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்புலட்சுமியின் பேரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தனக்கு நினைவிடம், தனது அறக்கட்டளை அமைக்கக்கூடாது என சுப்புலட்சுமி உயில் எழுதி வைத்துள்ளார். இந்நிலையில் அவரது பெயரில் விருது வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளனர். மேலும், சுப்புலட்சுமி குறித்து டி.எம்.கிருஷ்ணா மோசமான வார்ததைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 10 ஆண்டுகளாக எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் விருது வழங்கக்கூடாது என தற்போது மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சொத்துக்களுக்கு மட்டுமே உயில் எழுதி வைத்தது பொருந்தும் எனவும் விருதுக்கு பொருந்தாது என்வும் தெரிவித்தனர். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!