‘இன்டர்நேஷனல் நடிகர் மோடி’ திருமாவளவன் ஆவேசம்!
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற “அரசமைப்புச் சட்டம்-75 நூல்கள்” புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அனைவரும் அரசமைப்புச் சட்ட நாளன்று உறுதிமொழி ஏற்கிறார்கள். நாடு முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மோடி அரசு அமைந்த நாளில் இருந்து அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்று முழக்கமிட்டு வருகிறோம். 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த போது அதை நாம் கடுமையாக விமர்சித்தோம். இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று பேசினோம்.
இவர்களிடம் இருந்து அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று பேசினோம். பல்வேறு மாநிலங்களில் மாநாடு நடத்தினோம். ஒரு புறம் மனுதர்ம சட்டம், மறுபுறம் அரசமைப்புச் சட்டம், ஒடுக்கப்பட்டவர் எப்போதும் ஒடுக்க பட்டவர்களா இருக்க மாட்டார்கள். ஆள்பவர்கள் எப்போதும் ஆளுபவர்களாக இருக்க மாட்டார்கள்.
சமூக கலாச்சாரம், ஆணவ கொலைகள் என அனைத்திலும் மனுதர்ம சட்டம் தான். சமூக தளத்தில் அரசியமைப்பு சட்ட முறை இல்லை என்றார். நடிகர் திலகம் சிவாஜிக்கு தமிழ் திரையுலகில் அளிக்கப்பட்ட பட்டம். பிரதமர் மோடிக்கு இன்டர்நேஷனல் நடிகர் என்று ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டும். அதேபோல் சிஐஏ சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்றார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!