சர்வதேச கிராண்ட் செஸ் டூர் இன்று தொடக்கம்.. இந்தியாவின் பிரக்ஞானந்தா நேரடியாக தேர்வு!

 
செஸ்

2026-ம் ஆண்டுக்கான புகழ்பெற்ற கிராண்ட் செஸ் டூர்  தொடரின் இறுதிப்போட்டி, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இத்தொடரின் இறுதிச்சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இத்தொடர் முழுவதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தரவரிசையில் முன்னிலை பெற்ற முன்னணி 4 செஸ் வீரர்கள், பட்டத்தைக் கைப்பற்றுவதற்காக நாக்-அவுட் முறையில் நேரடியாக மோதவுள்ளனர்.

செஸ் பிரக்ஞானந்தா

இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் முன்னணி கிராண்ட்மாஸ்டர்  ஃபேபியானோ கருவானா, அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நட்சத்திர செஸ் வீரர் வெஸ்லி சோ, ஜெர்மனியின் இளம் திறமைசாலி வின்சென்ட் கீமர்  ஆகிய 4 பேர் தேர்வாகி உள்ளனர்.

உலகளவில் செஸ் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெறும் இத்தொடரில், இந்திய இள நட்சத்திரம் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் இடையே உச்சகட்டத்தை எட்டியுள்ளது.