உல்லாசத்திற்கு இடையூறு.. இரண்டரை வயது குழந்தையை கொன்று நாடகமாடிய தாய்!

 
ஆனம்

தாய் ஒருவர் தனது இரண்டரை வயது மகளை மாடியில் இருந்து தூக்கி எறிந்து படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடந்துள்ளது. கடந்த 21ம் தேதி கொலை நடந்தாலும், 5 நாட்களுக்கு பிறகுதான் உண்மை தெரிய வந்தது. அதற்கு முன், குழந்தை தவறுதலாக கீழே விழுந்துவிட்டதாக அவரது தந்தை முர்ஷித் நினைத்தார்.

ஆனால் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இவர் கடந்த 26ம் தேதி சிசிடிவி காட்சிகளை பார்த்தார். இதைத்தொடர்ந்து அவரது மனைவி ஆனம் மீது போலீசில் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், ஆனம் வேறு ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டதும், அதற்கு அவரது குழந்தை இடையூறாக இருப்பதும் தெரியவந்தது.

போலீஸ்

இரண்டரை வயது குழந்தை புதைக்கப்பட்டாலும், அவரது தாயார் கைது செய்யப்பட்டதையடுத்து, உரிய அனுமதியுடன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.29 வயதான முர்ஷித்துக்கும் அவரது மனைவிக்கும் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. மனைவி வேறொருவருடன் போனில் பேசிக் கொண்டிருந்த போது முர்ஷித் கண்டித்துள்ளார். மேலும், வீட்டிற்கு வருபவர்கள் குறித்து இரண்டரை வயது குழந்தை பலமுறை தந்தையிடம் கூறியுள்ளது. இதன் அடிப்படையில் ஆனம் தனது மகளை கொன்றதாக கூறப்படுகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web