அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா!! சர்வதேச விமான சேவைகள் ரத்து!!

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா!! சர்வதேச விமான சேவைகள் ரத்து!!

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. படிப்படியாக பல நாடுகளில் குறையத் தொடங்கியிருக்கும் நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் சில தினங்களுக்கு முன் பி.1.1.529 என்ற புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா!! சர்வதேச விமான சேவைகள் ரத்து!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட பெருமளவு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா இஸ்ரேலுக்கும் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா!! சர்வதேச விமான சேவைகள் ரத்து!!

இதனையடுத்து அங்கிருந்து பயணிகள் வருவதற்கு ஜெர்மனி, இத்தாலி நாடுகள் தடை விதித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு ரத்து செய்துள்ளது.

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா!! சர்வதேச விமான சேவைகள் ரத்து!!

இந்த வகையில் இந்தியாவும் தென்னாப்பிரிக்கா மற்றும் உலகின் மற்ற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு பரிசோதனைகளை கடுமையாக்கியுள்ளது. புதிய தொற்று வகை அதிகரித்தால் உடனடியாக அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா!! சர்வதேச விமான சேவைகள் ரத்து!!

இதுகுறித்து ஏஎன்ஐ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் இதுவரை புதிய வகை உருமாற்ற கொரோனா எதுவும் இதுவரை பதிவாகவில்லை . இதனை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

From around the web