செம!! மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!!

 
தானியங்கி டிக்கெட் விற்பனை

சென்னை மெட்ரோ ரயில் சேவையை தினமும்   சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் பயன்படுத்தி வருகின்றனர்.  குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.   வாகன நெரிசல், நேரத்துக்கு அலுவலகத்துக்கு செல்வது, காற்று, ஒலி மாசு, எரிபொருள் சேமிப்பு என பல விஷயங்கள் மெட்ரோ ரயில் சேவையை நோக்கி பொதுமக்கள் அதிகளவில் ஈர்க்க துவங்கி உள்ளது.

மெட்ரோ ரயில்


பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நேர மேலாண்மை காரணமாக பொதுமக்கள் மக்கள் பெரும்பாலும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில்,  மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம், வேலைக்கு செல்லும் மக்களின் அவசரம், மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் பெறும் பயணிகளின் வரிசை  இவைகளை   கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ நிர்வாகம் டிக்கெட் பெறுவதற்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

மெட்ரோ ரயில்


இதன்படி சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை  தொடங்கப்பட்டது. இதனை மேம்படுத்தும் வகையில் தானியங்கிஇயந்திரங்களில் பயணிகள் தங்களது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட் பெறும் புதிய வசதியை, மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அறிமுகத்திற்கு ரயில் பயணிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web