இந்த ராசிக்காரர்களுக்கு முதலீடு கைகொடுக்கும்.. முறையா பயன்படுத்திக்கோங்க!

 
ராசி

இன்றைய பஞ்சாங்கம் 
நல்ல நேரம்: காலை 9:30 - 10:30 | மாலை 4:30 - 5:30

ராகு காலம்: காலை 10:30 - 12:00

எமகண்டம்: மாலை 3:00 - 4:30

சந்திராஷ்டமம்: மகம், பூரம் நட்சத்திரங்கள் (சிம்ம ராசி) - இன்று புதிய முயற்சிகளையும், வாக்குவாதங்களையும் தவிர்ப்பது நல்லது.

மேஷம்:
வீடு, மனை வாங்குவது தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழல் நிலவும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபம் தரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

ரிஷபம்:
வெளியூர் பயணங்கள் வெற்றியைத் தரும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத் தலைவிகளுக்கு நிலவி வந்த மன அழுத்தம் குறையும். தம்பதியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்:
நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பல் தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ராசி

கடகம்:
அலுவலக ரீதியான வெளியூர் பயணங்கள் உண்டாகும். பெரியவர்களின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

சிம்மம்:
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை. அறிமுகமில்லாத நபர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். முக்கியமான முடிவுகளை இன்று தள்ளிப்போடுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

கன்னி:
உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா

துலாம்:
காதலர்களுக்குப் பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினால் சிறப்பான பலன் பெறலாம். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்:
உணவுப் பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடு அவசியம். தேவையற்ற செலவுகளைக் குறைத்துச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்குத் தெம்பளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ஜோதிடம் ராசி ராசிபலன்கள் நேரம் யோகம் அதிர்ஷ்டம்

தனுசு:
குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

மகரம்:
பெரியவர்களின் ஆசியால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வருமானமும் செலவும் சமமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

கும்பம்:
இன்று வேலையில் ஒரு வித மந்தநிலை ஏற்படலாம். சோம்பேறித்தனத்தைத் தவிர்த்துச் சுறுசுறுப்பாகச் செயல்படவும். முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஆவணங்களைச் சரிபார்க்கவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்:
மன உறுதி அதிகரிக்கும். முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்