கதறும் முதலீட்டாளர்கள்... பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி - ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு!

 
பங்குச்சந்தை

ஆர்பிஐ வட்டி உயர்வு மற்றும் பல்வேறு உலகளாவிய பொருளாதாரக் காரணிகளால் இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாகக் கடும் சரிவை சந்தித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,045 புள்ளிகள் சரிந்து 71,593 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 371 புள்ளிகள் சரிந்து 22,232 புள்ளிகளிலும் நிலைபெற்றன.

பங்குச்சந்தை

ஒரே நாளில் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்தியச் சந்தை தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது.

ஆர்பிஐ ரெப்போ வட்டி உயர்வு நடவடிக்கை,  பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 104 டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹96.78 ஆகச் சரிந்துள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவது போன்ற காரணங்களால் நேற்று ஒரே நாளில் 10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.