ஐஓபி வங்கியில் 250 காலிப் பணியிடங்கள்... டிகிரி முடிச்சவங்க விண்ணப்பிக்கலாம்!

 
ஐஓபி

 

 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி மொத்தம் 250 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 20 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 48,480 ரூபாய் முதல் 85,920 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் ஐஓபி வங்கி அறிவிப்பு தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் மற்றும் கடைசி தேதி 24.08.2026 ஆகும்.