2024 ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம்.. வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்..!!
Oct 26, 2023, 17:53 IST

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்பட 10 அணிகள் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் 2023 போட்டிக்காக கடந்தாண்டு டிசம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்ற ஏலத்தில் 80 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். அதிகபட்சமாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை ரூ. 18.50 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி .
இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில், 2024-ல் நடக இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் துபையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
From around the
web