ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

 
பெங்களூரு கொல்கத்தா ஐபிஎல்
இன்று இரவு 7.30 மணிக்கு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கேவிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அடுத்த ஆட்டத்தில் சொந்த மண்ணில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. 
ஐபிஎல்

பந்து வீச்சை பொறுத்தவரையில் பெங்களூரு அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அல்சாரி ஜோசப்[இல்லி பதிலாக இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் ரீஸ் டாப்லி களமிறங்கக்கூடும். கொல்கத்தா அணியின் பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் சுனில்நரேன் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இதனால் பந்து வீச்சை பலப்படுத்தும் வகையில் இன்றைய ஆட்டத்தில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web