ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதிகள் மாற்றம்... ரசிகர்கள் ஏமாற்றம்!

17-வது ஐபிஎல் சீசன் மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.ஏப்ரல் 17ம் தேதி இந்தியா முழுவதும் ராமநவமி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. வடமாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் மிக விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அன்றைய தினம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் போட்டி நடைபெற உள்ளது. ராம நவமியை முன்னிட்டு இந்த தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 16ம் தேதி இந்த போட்டி கொல்கத்தாவில் நடத்தப்படும் என ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.
"ஏப்ரல் 17ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி ராமநவமியால் தேதி மாற்றப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதனால் பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என கொல்கத்தா காவல்துறை ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தது.
ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் தொடங்க இருப்பதும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஏப்ரல் 16ம் தேதி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 16ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே நடைபெற இருந்த போட்டி ஏப்ரல் 17ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!