ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்... உளவுத்துறை ஏடிஜிபி தேவாசீர்வாதத்திற்கு டம்மி பதவி!
டிஜிபியாக இருக்கும் சைசேந்திரபாபு இன்னும் இரு நாட்களில் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மூவர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் உளவுத்துறை ஏடிஜிபி உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இதற்கான உத்தரவை நேற்று இரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி தமிழ்நாடு உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையிட ஏ.டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணமாக பாஸ்போர்ட் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக செயல்பட்ட டேவிட்சன் ஆசீர்வாதம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் 29/06/2023 அன்று வழக்கு விசாரணை வரும் நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் ஏற்கனவே சட்ட ஒழுங்கு பிரச்சனைகளில் கோட்டை விடுகிறார் சாராய சாவுகளை அதாவது கள்ளச்சாரய சாவுகளை முன்கூட்டியே கண்காணிக்க தவறிவிட்டார் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்த நிலையில் இப்பொழுது டம்மி ஆக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்த ஆட்கள்.

ஆவடி காவல் ஆணையராக இருந்த அருண் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பியாக இருந்த ஷங்கர் ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் அவர் கவனித்து வந்த பொறுப்புகள் உளவுத்துறை ஐஜி செந்தில் வேலனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது இவர் தென்மாவட்டங்களில் பணியாற்றிய பொழுது சாதிக்கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வந்து கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
