Breaking!! புறப்பட்ட சில நொடிகளில் வெடித்த விமான டயர்! உடைந்த கேபின் கூரை... அலறிய பயணிகள்... பகீர் வீடியோ!
Updated: Sep 16, 2026, 11:24 IST
ஈரானில் புறப்பட்ட சில நொடிகளிலேயே போயிங் 737 விமானத்தின் டயர் பழுதடைந்ததால் ஏற்பட்ட அதிர்வில், விமானத்தின் கேபின் கூரைப் பகுதி உடைந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் பாதுகாப்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் ஈரானின் மஷாத் விமான நிலையத்திலிருந்து கெர்மான்ஷாவை நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் ஒரு டயர் கழன்று அல்லது வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் காரணமாக இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு விமானம் கடுமையாக அதிரத் தொடங்கியதாக கூறப்படுகிறது. விமானி உடனடியாக அவசரநிலையை அறிவித்து மீண்டும் மஷாத் விமான நிலையத்துக்கு விமானத்தை திருப்பினார்.
