“எங்களை மீறிச்சென்ற 2 கப்பல்கள் கண்ணிவெடியில் சிக்கி சிதறியது” - ஈரான் தகவலால் ஹார்மூஸில் மீண்டும் பதற்றம்!

 
ஹார்மூஸ் ஹார்முஸ் ஈரான் படகு தீப்பற்றி தீப்பிடித்து கப்பல்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், இரண்டு எண்ணெய் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடியில் சிக்கி வெடித்துத் தீப்பிடித்ததாக ஈரானின் புரட்சிகர காவல் படை கடற்படை தெரிவித்துள்ளது.

View this post on Instagram

A post shared by Roya News English (@royanewsenglish)

இது குறித்து ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதியற்ற பாதையில் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கடற்படை கண்ணிவெடியில் சிக்கி இரு கப்பல்களும் வெடித்துத் தீப்பிடித்ததாக IRGC கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், அந்தக் கப்பல்கள் தங்களது ரேடார் மற்றும் வழிகாட்டும் கருவிகளை அணைத்துவிட்டு பயணித்ததாகவும் ஈரான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டு கப்பல்களில் ஒன்று மிகப்பெரிய எண்ணெய் கப்பல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் கப்பல் வணிக ஈரான்

சர்வதேச எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எனினும், இந்தச் சம்பவத்தில் சிக்கிய கப்பல்களின் பெயர்கள், அவற்றின் சேத விவரம், மாலுமிகளின் நிலை குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. ஈரான் வெளியிட்ட தகவலையும் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.