‘நோ’ சொன்ன ஈரான்.. அணு ஆயுத ஒப்பந்தம் முடக்கம்... அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவு! இன்று மாலை ட்ரம்ப் முக்கிய அறிவிப்பு?!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றங்களுக்கு இடையே, ஈரான் எடுத்துள்ள ஒரு முக்கிய முடிவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சர்வதேச அரங்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தத்தை அந்த நாடு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது, ஈரான் அணு ஆயுத வல்லமை பெற்ற நாடாக உருவாவதைத் தடுப்பதாகும். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே திரைமறைவிலும், நேரடியாகவும் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த ஒப்பந்தத்தில் இணைவதன் மூலம் தனது நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் எனக் கருதிய ஈரான், தற்போது அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.

ட்ரம்ப்

தனது ராஜதந்திர நகர்வுகள் மூலம் ஈரானைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என நம்பியிருந்த அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்திற்கு இது மிகப்பெரிய தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. ஈரானின் இந்த பிடிவாதமான முடிவு, அமெரிக்காவின் அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாகவே அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது.

ஈரானின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, டிரம்ப் இன்று மாலை வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஈரானுக்கு எதிரான கூடுதல் பொருளாதாரத் தடைகளாகவோ அல்லது ராணுவ ரீதியான எச்சரிக்கையாகவோ இருக்கலாம் எனத் தெரிகிறது.

ட்ரம்ப்

ஈரானின் இந்த முடிவால் வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.