ஈரானில் அதிர்ச்சி: ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 கசையடி தண்டனை!
Nov 25, 2026, 15:30 IST
ஈரானில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடி வீடியோ வெளியிட்ட 29 வயது பாடகி பராஸ்டோ அஹமதிக்கு 74 கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பரில் யூடியூப் தளத்தில் வெளியான அந்த வீடியோவில், அவர் ஹிஜாப் அணியாமல் ஸ்லீவ்லெஸ் ஆடையில் பாரம்பரியப் பாடலைப் பாடியிருந்தார்.
இந்த விவகாரம் கடும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் ஏற்படுத்திய நிலையில், பொது ஒழுக்கத்தை மீறியதாகக் கூறி நீதிமன்றம் வழங்கிய கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவருடன் இடம்பெற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் குழுவினருக்கும் கசையடி தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடவும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யவும் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
