அமெரிக்க ராணுவ தளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்காது... ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கடுமையான எச்சரிக்கை!

 
iran iran

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் தொடர்ந்து மாறி வரும் அசாதாரண பாதுகாப்புச் சூழல்களுக்கு மத்தியில், அமெரிக்காவுக்கு ஈரான் நாடு மீண்டும் ஒரு கடுமையான நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளது. புனித ஹஜ் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு உரையாற்றிய ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, மேற்காசியப் பகுதிகள் இனிமேல் அமெரிக்க ராணுவ தளங்களைப் பாதுகாக்கும் கேடயமாகச் செயல்படாது என்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் அதிரடியாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஈரான் உச்ச தலைவர் வெளியிட்டுள்ள அந்த எச்சரிக்கை பதிவில், "காலத்தின் சக்கரம் எப்போதும் பின்னோக்கிச் சுழலாது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளும் நிலப்பரப்புகளும் இனிமேல் அமெரிக்க ராணுவ தளங்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கப் போவதில்லை. அமெரிக்கா இந்த வளைகுடா நாடுகளில் புகுந்து சதி வேலைகளைச் செய்வதற்கும், தங்களது புதிய ராணுவ தளங்களை அமைத்துப் பாதுகாப்பாக வாழ்வதற்கும் இனிமேல் இங்கு எவ்வித இடமும் கிடையாது" என்று மிகவும் காட்டமாக எச்சரித்துள்ளார்.

தற்போதைய சர்வதேச பாதுகாப்பு ஆய்வுகளின்படி, பஹ்ரைன், குவைத், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் உள்ளிட்ட சுமார் 19-க்கும் மேற்பட்ட முக்கிய வளைகுடாப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் தங்களது நிரந்தர மற்றும் தற்காலிக ராணுவ முகாம்களை அமைத்துப் பலத்த பாதுகாப்புடன் இயங்கி வருகிறது