எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது... ஈரான் கடும் எச்சரிக்கை!

 
america

 

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் புதிய பொருளாதார தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா நாடுகளில் இருந்து ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி முழுமையாக முடக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. உலகளவில் 30 சதவீத எரிபொருள் விநியோகத்திற்குப் பயன்படும் ஹார்முஸ் நீரிணையை மூடுவதாகவும் ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

The History of U.S.-Iranian Irregular Warfare | Small Wars Journal by Arizona State University

அங்கு விதிமுறைகளை மீறிச் செயல்படும் கப்பல்களுக்கு அபராதம், சிறைபிடித்தல் மற்றும் பறிமுதல் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி எச்சரிக்கை சர்வதேச நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Iran: Diplomacy Returns, Escalation Looms | ISPI

இந்த விவகாரத்தால் உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் விலை நிலவரத்தில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நிலைமையைக் கண்காணித்து வரும் பிற நாடுகளும் இதுகுறித்துத் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.