மைதானத்தில் கலங்க வைத்த ஈரான் வீரர்கள் - பள்ளி புத்தகப் பைகளை ஏந்தி உயிரிழந்த குழந்தைகளுக்குக் கண்ணீர் அஞ்சலி!

 
ஈரான் ஈரான்

ஈரானில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஈரான் தேசிய கால்பந்து அணி வீரர்கள் ஒரு நெகிழ்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்தனர். துருக்கியின் அந்தல்யாவில் நடைபெற்ற ஈரான் மற்றும் நைஜீரியா அணிகளுக்கு இடையிலான நட்புமுறை கால்பந்து போட்டி. போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, ஈரான் வீரர்கள் அனைவரும் தங்களது கைகளில் பிங்க் மற்றும் ஊதா நிறப் பள்ளிப் பைகளை ஏந்தியபடி நின்றனர். போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக அனைத்து வீரர்களும் தங்களது கைகளில் கருப்பு நிறப் பட்டையை அணிந்திருந்தனர்.

அமெரிக்கா ஈரான்

கடந்த பிப்ரவரி 28 அன்று, ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் அமைந்திருந்த 'ஷஜரே தய்யிபா' என்ற பெண்கள் ஆரம்பப் பள்ளியின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட சுமார் 110-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் உட்பட மொத்தம் 175 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுனெஸ்கோ மற்றும் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் உள்ளிட்டோர் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 காசா மீது மீண்டும் வான்வெளிதாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ... குழந்தைகள் உட்பட 84 பேர் பலி!

ஈரான் கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவர் மெஹ்தி முகமது நபி இது குறித்து கூறுகையில், "எங்கள் வீரர்கள் இந்தப் பள்ளித் தாக்குதலால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கவே இந்தச் கூட்டு முடிவை அவர்கள் எடுத்தனர்," என்று தெரிவித்தார்.