ஈராக்கில் பயங்கர தீ விபத்து: அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோரத்தில் 4 பேர் பலி - 28 பேர் காயம்... அதிர்ச்சி வீடியோ!

 
ஈரான்

 

ஈராக் நாட்டின் பஹ்ரா மாகாணம் அல் ஹர்தா நகரில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்த மின் நிலையம் அப்பகுதியின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

இந்தக் கோரத் தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் சிக்கிய 28 பேர் பலத்த காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

At least four people have been killed and 30 others injured in a fire at a power station in Basra, southern Iraq on Saturday 21 November. The blaze spread to neighbouring houses

தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.