டிச.15 முதல் வாகனக் காப்பீட்டில் புதிய மாற்றம்! இனி உரிமையாளர்களுக்கு கூடுதல் தேர்வு

 
இன்ஷூரன்ஸ்

 

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), தனியார் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான காப்பீட்டு முறையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் வாகனக் காப்பீடு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும்.

You can choose four-layer motor insurance cover from 15 December: What IRDAI's new rules mean for car and bike owners | Mint

புதிய விதிகளின்படி, மூன்றாம் நபர் பாதிப்புகளுக்கான காப்பீடு தொடர்ந்து கட்டாயமாக இருக்கும். வாகனத்தில் பயணிப்பவர்கள் அல்லது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கான சட்டப்பூர்வ பொறுப்புக் காப்பீடு விருப்பத் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், வாகனத்துக்கு ஏற்படும் சேதங்களுக்கான சொந்த சேதக் காப்பீடும் (Own Damage) விருப்பத்தின் அடிப்படையில் பெறலாம்.

தனிநபர் விபத்துக் காப்பீட்டில், வாகன உரிமையாளருக்கான காப்பீடு கட்டாயமாகத் தொடரும். பயணிகள் மற்றும் பிற ஓட்டுநர்களுக்கான கூடுதல் விபத்துக் காப்பீடு விருப்பத் தேர்வாக இருக்கும்.

IRDAI New Rules: వాహనదారులకు గుడ్ న్యూస్.. కారు, బైక్ ఇన్సూరెన్స్‌లో భారీ మార్పులు.. IRDAI కీలక నిర్ణయం! | Irdai New 4 Layer Motor Insurance Policy Rules Effective From December 15 | 10TV

மேலும், ஒவ்வொரு காப்பீட்டுப் பிரிவுக்கும் விதிக்கப்படும் பிரீமியம் தொகையைத் தனித்தனியாகக் குறிப்பிட வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான காப்பீட்டுப் பாதுகாப்பைத் தேர்வு செய்யும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.