கோலாகலக் கொண்டாட்டம்... இருட்டுக்கடை அல்வா இல்லத்திருமண விழா... !

தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி சாலையில் உள்ள சொக்கம்பட்டி என்ற ஊர் ஒரு காலத்தில் ஜமீனாக இருந்து வந்தது. அங்கு ஜமீனில் உள்ள குதிரைகளுக்கு வட இந்தியர்கள் சிலர் நல்ல தரமான உணவளித்து வந்தனர் .இந்த பிரத்யெக பராமரிப்பில் ஜமீனில் இருந்த குதிரைகள் நன்கு போஷாக்குடன் வளர்ந்தன. அவர்கள் குதிரைகளுக்கு அளித்த உணவுகளில் ஒன்றுதான் இந்த சொக்கம்பட்டி அல்வா.காலப்போக்கில் அந்த ஜமீன் ஆட்சிக்கு முடிவு வந்ததும் குதிரைக்கு உணவளிக்க வந்தவர்களுக்கு அங்கு வேலையில்லை. அவர்கள் திருநெல்வேலியில் குடியேறி அவர்களில் ஒருவரான ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணசிங் என்பவரின் மகன் பிஜிலி சிங் தாமிரபரணியில் தண்ணீர் எடுத்து இந்த அல்வாவை தயாரித்தார். அந்த அல்வாவை சுவைத்த திருநெல்வேலி மக்கள் அதன் சுவையில் மயங்கிவிட்டனர்.
இந்த பிஜிலி சிங் என்பவர்தான் இருட்டுக்கடை அல்வா கடையை தொடங்கி வைத்தவர்.1940 முதல் இந்த இருட்டுக்கடை அல்வா இப்பொழுது 3 ம் தலைமுறை வாரிசுகளால் விற்பனை செய்யப்படு வருகிறது. இருட்டுக்கடை அல்வாவிற்கு என்று பிரத்தியேக சுவை வரக் காரணம் அல்வா செய்ய பயன்படுத்தப்படும் கோதுமையை இயந்திரத்தில் அரைக்காமல் இன்னமும் கைகளால்தான் அரைக்கிறார்கள். அத்துடன் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும் இந்த அல்வாவிற்கென பிரத்தியேக சுவையை தருவதாக கூறப்படுகிறது. மேலும் மெஷின் என்று இல்லாமல் இன்றளவும் கைகளால் மட்டும் இந்த அல்வாவை கிண்டுகிறார்கள்.இதனால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு அல்வா மட்டுமே தயார் செய்யப்படுகிறது.
இந்த இருட்டுக்கடை மிகவும் பழைமையானது .இந்தக் கடை பெயருக்கு ஏற்றவாறு இருட்டான சூழ்நிலையில்தான் பல ஆண்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு வரை நாற்பது வாட்ஸ் குண்டு பல்புதான் அந்தக் கடையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது சிறிது மாறுதல் செய்யப்பட்டு 200 வாட்ஸ் பல்ப் ஒளிர்கிறது. இந்த இருட்டுக்கடை அல்வாவிற்கு தனி சுவை வரக் காரணமே தாமிரபரணி தண்ணீரும் கோதுமையில் அரைத்த பாலும், நெய், சர்க்கரை இது தவிர வேறு எதுவுமே சேர்க்க மாட்டார்கள். இதெல்லாம்தான் அந்த அல்வாவின் சுவை மாறாமல் இருப்பதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
எங்கள் இருட்டுக்கடை குடும்ப திருமணவிழா உங்கள் அன்பாலும் ஆசிர்வாதத்தாலும் சிறப்புற்றது. இத்திருநாளை உடன்நின்று சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி ☺️✨🙏#IruttukadaiWedding #IruttukadaiMarriagefunction #Iruttukadaihalwa #Tirunelveli pic.twitter.com/vU4RbUuiYy
— Iruttukadai Halwa Shop Tirunelveli (@Iruttukadaialwa) February 3, 2025
இந்தக் கடை பழைய பாரம்பரிய முறைப்படி இன்னும் அதே பழைய கட்டடத்தில்தான் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி இங்கு பயன்படுத்தப்படும் பணப்பெட்டியில் தொடங்கி அல்வா சுமந்து செல்லும் கொள்கலன்கள் வரை அனைத்தும் பழைய பாரம்பரியம் மிக்கவையே . இந்த இருட்டுக்கடை சாயங்காலம் சுமார் 5.30 மணிக்கு மேல் தான் திறக்கப்படும். இரவில் மட்டுமே அல்வா கிடைக்கும் என்பதால் அதற்கு இருட்டுக்கடை அல்வா என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி 1ம் தேதி இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் இல்லத் திருமண விழா நெல்லையில் கோலாகலமாக நடைபெற்றது. பலர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர். திருமண விழா பாரம்பரிய முறையில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.ஆட்டம் பாடம் கொண்டாட்டம் என அந்த இடமே களைகட்டியது.
இந்நிலையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.அதில் எங்கள் இருட்டுக்கடை குடும்ப திருமணவிழா உங்கள் அன்பாலும் ஆசிர்வாதத்தாலும் சிறப்பாக நடைபெற்றது. இத்திருநாளை கூட இருந்து சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி என ட்வீட் செய்து கல்யாண வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளனர்
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!