தனுஷ் இவ்வளவு மோசமா?! தனுஷூடன் நடித்த அத்தனை நடிகைகளும் நயன்தாராவுக்கு ஆதரவு!
சமூக வலைத்தளம் முழுக்கவே நயன்தாரா - தனுஷ் யார் கெத்து? என்கிற விவாதம் தான் காலை முதல் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைத்துள்ள நிலையில், நடிகர் தனுஷுடன் நடித்த நடிகைகள் பலரும் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இத்தனைக்கும் தனுஷ் தயாரித்த ‘எதிர் நீச்சல்’ படத்தில் நட்புக்காக பணமே வாங்காமல் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் நயன்தாரா. ஆனால், இப்போது 3 வினாடிகள் பயன்படுத்தியிருக்கும் வீடியோவுக்கு ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் தனுஷ்.
இதில் நடிகைகள் ஸ்ருதிஹாசன், பார்வதி, நஸ்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி, அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா ராஜேஷ் அஞ்சு குரியன், தயாரிப்பாளர் ரியா ஷிபு உள்ளிட்டோரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷூக்கு எதிரான நயன்தாராவின் ட்விட்டர் பதிவில் பல முன்னணி நடிகைகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் ஸ்ருதிஹாசன், பார்வதி, நஸ்ரியா, அனுபமா ஆகியோர் தனுஷுடன் ஜோடியாக படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!