புதுச்சேரியில் இந்தி கட்டாயம்? - "மொழிப்போர் மீண்டும் வெடிக்கும்" - திமுக சிவா எச்சரிக்கை!

 
புதுச்சேரி திமுக சிவா புதுச்சேரி திமுக சிவா

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இந்தி மொழியை மூன்றாவது மொழியாகக் கட்டாயமாக்கும்அறிவிப்பு, அம்மாநில அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா, மத்திய அரசின் இந்த முடிவுக்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். புதுச்சேரி மாநிலத்திற்கெனத் தனித்துவமான பிரெஞ்சு கலாச்சாரமும், ஆழமான மொழி வரலாறும் உண்டு. இந்தி திணிப்பு என்பது இந்த அடையாளத்தைச் சிதைக்கும் ஒரு முயற்சியாகும்.

மாணவர்களிடம் குஜராத் கலவரம் பற்றி கேள்வி கேட்ட சி.பி.எஸ்.இ..!!

மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக மொழியைத் திணிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், புதுச்சேரி முழுவதும் மக்களைத் திரட்டிப் பிரம்மாண்டமான மொழி உரிமைப் போராட்டத்தை நடத்துவோம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள் சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்குத் தமிழ் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'இருமொழிக் கொள்கை' (தமிழ் மற்றும் ஆங்கிலம்) என்பதே புதுச்சேரியின் நீண்டகால நிலைப்பாடாக இருந்து வருகிறது.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான இந்த மொழிப் போர், புதுச்சேரி கல்வித் துறையில் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.