மரித்ததா மனிதநேயம்.. பகீர் வீடியோ... நெடுஞ்சாலையில் ஆறாகப் பாய்ந்த எண்ணெய் - காயமடைந்தவரைக் கண்டுக்கொள்ளாமல் வாளிகளுடன் படையெடுத்த பொதுமக்கள்!

 
எண்ணெய்

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுகு எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி எண்ணெய் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்க முற்படாமல், சாலையில் வழிந்த எண்ணெயைத் தங்களது பாத்திரங்களில் அள்ளிக் கொள்ள பொதுமக்கள் முண்டியடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று, அதற்கு முன்பு சென்ற கடுகு எண்ணெய் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் டேங்கர் பகுதி சேதமடைந்தது. ஆறாக ஓடிய எண்ணெய்: டேங்கர் உடைந்ததால் அதிலிருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் கடுகு எண்ணெய் சாலையில் ஆறாகப் பெருகி வழிந்தோடத் தொடங்கியது.


விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருவதற்குப் பதிலாக, அப்பகுதி மக்களும் அவ்வழியே சென்றவர்களும் கையில் கிடைத்த வாளிகள், பாத்திரங்கள் மற்றும் கேன்களுடன் ஓடிவந்து சாலையில் ஓடிய எண்ணெய்யைப் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.

ஆபத்தான சூழலிலும் சிலர் எண்ணெயைத் திரட்டுவதிலும், மற்றவர்கள் இதனைத் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து வேடிக்கை பார்ப்பதிலுமே குறியாக இருந்தது சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.