"நாங்கள் பார்க்காத வழக்கா?" - ஆர்.எஸ்.பாரதி ஆவேசப் பேச்சு!
Jul 31, 2026, 17:50 IST
"செந்தில் பாலாஜி ஏற்கனவே 19 மாதங்கள் சிறையில் இருந்தவர் என்பதால், இதுபோன்ற வழக்குகளைக் காட்டி திமுகவை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.எஸ். பாரதி, "வழக்குகள் போடுவதன் மூலம் திமுகவை அழித்துவிடலாம் அல்லது முடக்கிவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இது போன்ற வழக்குகளை நாங்கள் புதிதாகப் பார்ப்பவர்கள் அல்ல."

"ஏற்கனவே செந்தில் பாலாஜி 19 மாதங்கள் சிறைவாசத்தை அனுபவித்துப் போராடியவர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ திமுக என்றும் அஞ்சாது. எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய, மாநில அமைப்புகள் மூலம் தொடரப்படும் அனைத்து விதமான சட்டச் சவால்களையும் நீதிமன்றங்கள் வாயிலாகவே எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது" என அவர் கூறினார்.
