ஐடி துறையில் 'ஜிஹாதி' ஊடுருவலா? டிசிஎஸ் தொடர்ந்து இன்போசிஸிலும் அதிர்ச்சி - அமைச்சர் நிதேஷ் ராணே 'என்ட்ரி'!
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் ஐடி துறையில், இதுவரை கேள்விப்படாத ஒரு புதிய 'வைரஸ்' ஊடுருவியிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் எழுந்த 'மதமாற்ற' புகார்கள் அடங்குவதற்குள், இப்போது புனே இன்போசிஸ் நிறுவனத்திலும் "ஜிஹாதி துன்புறுத்தல்" நடப்பதாக எழுந்துள்ள புகார், ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகையும் அதிர வைத்துள்ளது.
முதலில் புயலைக் கிளப்பியது நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம். அங்கு பணியாற்றும் எட்டு பெண் ஊழியர்கள் மற்றும் ஒரு ஆண் ஊழியர் அளித்த புகார், ரத்தத்தை உறைய வைப்பதாக உள்ளது. அலுவலகத்திலேயே தங்களைத் தொழுகை நடத்தக் கட்டாயப்படுத்தியதாகவும், மாட்டிறைச்சி சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இளம் பெண் ஊழியர்களைத் திட்டமிட்டு ‘காதல்’ வலையில் வீழ்த்தி, பின்னர் அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சிகள் நடந்ததாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Dear sir @NiteshNRane @Dev_Fadnavis there are many girls complaining about jihadi harassment going on in @InfosysBPM Pune , especially Damler Project
— 🧠 (@BackupBrainy) April 12, 2026
Can you please look into it
இந்த மொத்த விவகாரத்தையும் பின்னணியில் இருந்து இயக்கியது நிதா கான் என்ற பெண்மணிதான் என மகாராஷ்டிர போலீசாரின் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளது.
தனது நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இந்தச் செயலைக் கண்டு டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். "டாடா குழுமத்தின் மாண்புகளுக்கு இது முற்றிலும் எதிரானது. இந்தப் புகார்கள் மிகவும் கவலையளிக்கின்றன" என்று கூறியுள்ள அவர், இது குறித்து விசாரிக்க மூத்த நிர்வாகி ஆர்த்தி சுப்ரமணியன் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளார். "தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது" என்பதே டாடாவின் தற்போதைய நிலைப்பாடு!

டிசிஎஸ் விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போதே, அடுத்த குண்டு புனே இன்போசிஸ் பக்கத்திலிருந்து வந்துள்ளது. எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அமைச்சர் நிதேஷ் ராணே ஆகியோரைக் டேக் செய்து ஒரு பதிவைப் போட்டார்.
அதில், "சார், புனே இன்போசிஸில், குறிப்பாக 'டாம்லர்' திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஜிஹாதிகளால் கடும் துன்புறுத்தல் நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. தயவுசெய்து இதைப் பாருங்கள்!" - என்று பதிவு நீள்கிறது.
மகாராஷ்டிர அரசியலில் 'நறுக்' எனப் பேசக்கூடிய அமைச்சர் நிதேஷ் ராணே, அந்தப் புகாரை உடனே கையில் எடுத்துக்கொண்டார். "கவனத்தில் கொள்ளப்பட்டது" என அவர் ஒற்றை வரியில் பதிலளித்தது, அந்தத் துறை ஊழியர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் ஆதாரங்களை வழங்கவும் புகார்தாரர்கள் தயாராக உள்ளனர். இது வெறும் ட்விட்டர் புகாராக மட்டும் இல்லாமல், அரசு ரீதியிலான விசாரணையாக மாறப்போவது உறுதி!

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முதற்கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. பொதுவாகக் கிராமப்புறங்களில் நடப்பதாகக் கூறப்படும் 'மதமாற்ற' உத்திகள், இப்போது ஹை-டெக் ஐடி நிறுவனங்களுக்குள் ஊடுருவியுள்ளது அதிகாரிகளைப் புரிய வைப்பதாக உள்ளது.
பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான பெண் ஊழியர்களைக் குறிவைத்து, அவர்களை மனரீதியாகத் துன்புறுத்தித் தங்கள் மத நடைமுறைகளைப் பின்பற்றச் செய்வது ஒரு 'நாகரீக போர்முறை' போலவே நடப்பதாகக் கூறப்படுகிறது.
