அங்கேயுமா? நடிகர் அஜித்தின் கார் ரேஸைக் காண செல்லும் த்ரிஷா - ராதிகா!
Sep 11, 2026, 18:54 IST
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கார் பந்தயப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நடிகர் அஜித்தை, நடிகை ராதிகா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிட்டனின் சில்வர்ஸ்டோன் சர்கியூட்டில் கார் பந்தயப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் அஜித்தை, நடிகை ராதிகா நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

லண்டனில் நடிகை த்ரிஷாவுடன் இருக்கும் புகைப்படங்களை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதால், பந்தயக் களத்திற்கு நடிகை த்ரிஷாவும் நேரில் சென்று நடிகர் அஜித்துக்கு வாழ்த்து சொல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை தொடங்கவுள்ள இந்த முக்கிய சர்வதேசக் கார் பந்தயத்தை, தமிழக முதல்வர் விஜய் நேரில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
