தமன்னாவின் சொத்து மதிப்பு இத்தனைக் கோடியா? - திரையுலகில் 20 ஆண்டுகால சாதனை!
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாகக் கோலோதி வரும் தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ளது.
பல்வேறு திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் தொழில்களில் செய்துள்ள முதலீடுகள் மூலம் நடிகை தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.120 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சுமார் ரூ.4 கோடி வரை சம்பளமாகப் பெறுகிறார். மேலும், பல்வேறு பிராண்டுகளின் விளம்பரங்களில் நடிப்பதற்காக ரூ.2 கோடி வரை கட்டணமாகப் பெறுகிறார்.
மும்பை நகரின் மையப்பகுதியில் தோராயமாக ரூ.16 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான சொகுசு வீடு ஒன்றை இவர் சொந்தமாக வைத்துள்ளார். மேலும் பல அதிநவீன ஆடம்பரக் கார்களையும் தன்வசம் கொண்டுள்ளார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, பல முன்னணி தொழில் நிறுவனங்களிலும் முதலீடு செய்து ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் தமன்னா வலம் வருகிறார்.
