தமிழகம் போதையில் தள்ளாடுகிறதா? 4கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல்!
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனைத் தொடர்ந்து நடந்து வருகிறது. போலீசார் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு, விற்பனை செய்பவர்களைக் கைது செய்து வந்தாலும் தொடர்ந்து தினந்தோறும் ஏதோவொரு மாவட்டத்தில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது.
சமீபமாக நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கஞ்சா போதையில் இருந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்குள் கஞ்சா விற்பனை தொடர்ந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. போதையில் தள்ளாடும் மாநிலமாக தமிழகம் உருவாகி வருகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனவர். அவர்களிடம் இருந்து 4 கிலோ 600 கிராம் 2 மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காணியாளர் தெரு கீழ்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக 2 மோட்டார் சைக்கிள்களில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் ஆறுமுகநேரி காணியாளர் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் பாலமுருகன் (22), குரங்கணி தொட்டியம் குடியிருப்பு பகுதி தெற்கு தெருவைச் சேர்ந்த ஜெயந்திர பாண்டியன் மகன் மணிகண்டன் (31), முக்காணி மேலூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெரியநாயகம் (42) என்பதும், 2 மோட்டார் சைக்கிள்களில் மொத்தம் 4 கிலோ 600 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சாவுடன் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபரிடம் இருந்து கஞ்சா வாங்கி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
