'தேசிய வெற்றிக் கழகம்' ஆக மாறுகிறதா தமிழக வெற்றிக் கழகம் - வெளியாகும் புதிய தகவல்!
தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சியை தேசிய அரசியலை நோக்கி நகர்த்துவது குறித்தும், பெயர் மாற்றம் செய்வது தொடர்பாகவும் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதற்காகத் தவெக தொடங்கப்படவில்லை என்றும், கட்சி தனது சொந்தத் தனித்துக் கொள்கையுடனேயே செயல்படும் என்றும் தவெக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 46 இடங்களை வென்றெடுத்த ஜனதா தளம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எச்.டி. தேவகவுடா பிரதமர் ஆனது போல, வரும் 2029 தேர்தலில் தவெக 100 இடங்களைக் கைப்பற்றினால் விஜய்க்கும் பிரதமர் ஆகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழக அரசியலைத் தாண்டி தேசிய அளவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கில், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரை 'தேசிய வெற்றிக் கழகம்' என மாற்றுவது குறித்துக் கட்சிக்குள் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
