கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? சட்ட விரோதத்தில் ஈடுபட்ட தம்பதி.. இரவோடு இரவாக கைது செய்த போலீசார்!

 
அய்யப்பன் - கங்கா கவுரி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பசுமை நகர் பகுதியில் இரண்டு தம்பதிகள் வயிற்றில் இருக்கும் கருவை ஆணா, பெண்ணா என சட்ட விரோதமாக அடையாளம் கண்டு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் பெற்று வருவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் கண்ணகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை செய்தனர்.

அப்போது, திருப்பத்தூரை அடுத்த ராட்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (29), அவரது மனைவி கங்கா கவுரி (27) ஆகியோர் கிரீன் சிட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, கர்ப்பம் தரித்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு முறைகேடாக ஸ்கேன் செய்து கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என அவர்கள் தெரிவித்து வந்துள்ளனர் என தெரிய வந்தது.

அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்த போது, அங்கு வரும் கர்ப்பிணி பெண்களிடம் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்று வருவது ஒப்புக்கொண்டனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவி இருவரையும் கைது செய்து அந்த வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web