ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயற்சியா ? அதிமுக கேள்வி!
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்துச் சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ கருப்பையா இழிவாகப் பேசியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அதிமுக, இதற்குத் தமிழக முதல்வர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கருப்பையா, அவையில் ஜல்லிக்கட்டு குறித்து இழிவாகப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவையில் எம்எல்ஏ கருப்பையா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் ஏன் இன்னும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை என்ற சந்தேகத்தையும் அதிமுக எழுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதிக்கும் மறைமுக திட்டத்தில் தவெக அரசு செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ள அதிமுக, இதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
