"டம்மி முதல்வரின் ஆசியோடு தான் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?" - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

 
உதயநிதி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் விஜய்யையும், தவெக அரசையும் கடுமையாகச் விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தில் மே 4-க்குப் பிறகு சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டதாகவும், நாளிதழ்களில் 'கொலைப்பட்டியல்' எனத் தனி பத்தியே போடும் அளவிற்குத் தினசரி கொலைகள் எல்லை மீறி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறுமி காணவில்லை விழுப்புரம் கடத்தல்

மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. சேலத்தில் ரவுடி டேவிட் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் கொலையானது மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொல்லப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தவெக பெண் நிர்வாகி ஒருவர் தனது கணவனையே கொலை செய்து கைது செய்யப்பட்டது.

"ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குச் சென்று டிராக்டர் ஓட்டி, டீ குடித்து, முருங்கைக்காய் பறித்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக் கூட்டத்தையாவது நடத்துவாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை ரவுடி மதன்

அப்படி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியிருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன் என்றும், "டம்மி முதலமைச்சரின் ஆசியோடுதான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?" என்றும் தனது பதிவில் ஆவேசமாகக் கேட்டுள்ளார்.