திமுகவின் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறதா தவெக அரசு?! - சர்ச்சையாகும் "சிங்கப்பெண்" அதிரடிப்படை!

 
சிங்கப்பெண் சிங்கப்பெண்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் வாகனங்கள், தற்போது புதிய பெயரில் மாற்றப்பட்டுள்ளதாக எழுந்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில், சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சுமார் ரூ.12 கோடி மதிப்பீட்டில் 'பிங்க் பெட்ரோல்' க்ரெட்டா வாகனங்கள் வாங்கப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்தன. தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, பெண்கள் பாதுகாப்பிற்காக "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" என்ற புதிய பிரிவைத் தொடங்கியுள்ளது.

இளஞ்சிவாப்பு ரோந்து வாகனம்  கார்

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அண்மையில் தொடங்கி வைத்த இந்த அதிரடிப்படைக்காக, முந்தைய அரசு வாங்கிய அதே வாகனங்களில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” என்ற புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

பழைய திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், புதிய பெயரில் மாற்றப்படுவதை அந்த வீடியோ சுட்டிக்காட்டுகிறது. முந்தைய அரசின் திட்டங்களை அப்படியே எடுத்துக்கொண்டு பெயர் மாற்றம் செய்வது சரியா என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

ஸ்டாலின் விஜய்

பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், முந்தைய அரசின் வாகனங்கள் பெயர் மாற்றப்பட்டுப் பயன்பாட்டிற்கு வருவது அரசியல் ரீதியாகவும் கவனத்தைப் பெற்றுள்ளது.