தமிழகத் தேர்தலுக்குத் தடையா? - உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

 
ஸ்டாலின் தேர்தல் தமிழகம் ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தலையே ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கியக் காரணங்கள். அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளில் சட்டத்திற்குப் புறம்பான இலவசங்களை அறிவித்து வாக்காளர்களைக் கவர முயல்கின்றனர்.

தமிழ்நாடு தேர்தல் தமிழகம்

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இறைத்து வருகின்றன. இது தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலுமாகச் சிதைக்கும் செயல். இது போன்ற முறையற்ற செயல்கள் ஒரு நேர்மையான தேர்தலை நடத்த வழிவகுக்காது; இது ஜனநாயகத்தின் மாண்பையே கேள்விக்குறியாக்குகிறது.

"இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை, ஏப்ரல் 23-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்க இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பிரசாரம் வரும் 21-ஆம் தேதியுடன் முடிய உள்ளதால், இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் தேர்தல் விஜய்

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ரூ.2.6 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்த மனுவின் மீதான உச்ச நீதிமன்றத்தின் முடிவு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தையோ அல்லது தற்காலிகத் தடையையோ ஏற்படுத்துமா? என்பது திங்கட்கிழமை தெரிந்துவிடும்.