"தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது" - கனிமொழி எம்.பி. கடும் தாக்கு!

 
கனிமொழி

நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதையால் இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி காவல் மரண விவகாரத்தில் மாநில அரசின் செயல்பாட்டைக் கடுமையாகச் சாடியுள்ள கனிமொழி எம்.பி., காவல்துறைக்கு நேரடியாகப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் மக்கள் பிரச்சனையைப் பொருட்படுத்தாமல் திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அக்

"இன்று தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று உண்மையில் செயல்படுகிறதா? என்பதே பெரிய சந்தேகமாக உள்ளது" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

தொடரும் காவல் மரணங்கள் குறித்து மாநில அரசு அமைதி காப்பதாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நாளை அவர்கள் பணிக்குத் திரும்பிய பிறகாவது, நாட்டையே உலுக்கியுள்ள இந்தத் தூத்துக்குடி காவல் மரணம் குறித்துத் தங்களின் வாயைத் திறக்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.