நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்ப்பு!

 
மழை மாணவி

பத்திரமா இருங்க மக்களே... நாளை ஆகஸ்ட் 17ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 19ம் தேதி என இந்த 2 நாட்களும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கும் பலரும், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மழை பெய்யக்கூடும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பொதுமக்களும் பயணிகளும் தங்களது பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

School Student in Rain

ஆகஸ்ட் 17-ம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகப் பகுதிகளில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

rain

குறிப்பாகக் கனமழை பெய்யும் நேரங்களில் சில இடங்களில் வலுவான இடி மற்றும் மின்னல் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் இந்த மாறுபட்ட வானிலை நிலை காரணமாகப் பல பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது.