தலைமை ஆசிரியர் செய்யுற காரியமா இது? 5 ஆம் வகுப்பு மாணவியிடம் ஆபாச வீடியோ காட்டி செய்த கொடூரம்!

 
பிராங்க்ளின்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் (44). இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி அதே பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் செல்போனில் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை காட்டி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் பிராங்களினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி முதல்வர் உத்தரவிட்டார். 5ம் வகுப்பு மாணவியிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆபாச வீடியோவை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web