50 வயதை நெருங்கியும் திருமணம் செய்யாமல் வாழும் நடிகைகள் - லிஸ்ட்ல த்ரிஷாவும் இருக்காரா?!
திரையுலகில் தங்களின் திறமையால் உச்சம் தொட்ட பல முன்னணி நடிகைகள், சமூகத்தின் வழக்கமான நடைமுறைகளைக் கடந்து தங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கும் சுயேச்சை வாழ்க்கைக்கும் முன்னுரிமை அளித்துத் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர்.
90-களில் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழித் திரைப்படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நக்மா, தற்போது ஆன்மீகம் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபாடு காட்டி வருகிறார். இடையில் அரசியலில் ஆர்வம் காட்டியவர் தற்போது அரசியலில் இருந்தும் ஒதுங்கியிருக்கிறார்.
இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த குணச்சித்திர மற்றும் முன்னணி நடிகைகளில் ஒருவரான தபு, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சுதந்திரமான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதுவரை திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

தமிழில் பல வெற்றிப் படங்களில் நாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த கௌசல்யா, ஆரம்ப காலங்களில் இருந்தே திருமண வாழ்க்கையில் அதிக ஈடுபாடு காட்டாமல் தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
புகழ்பெற்ற திரைப்பட நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மீண்டும் பிரபலமானவருமான மும்தாஜ், இதுவரை திருமணம் செய்துக் கொள்ளாமல் தனித்து வாழ்ந்து வருகிறார். ஆன்மிக பாதையில் பயணித்து, தனித்து கிளாமர் புகைப்படங்களை இனி பயன்படுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பரதநாட்டியக் கலைஞர் மற்றும் தேசிய விருது பெற்ற நடிகையான ஷோபனா, ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருவதுடன் நடன உலகிலும் சாதித்து வருகிறார். இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பல ஆண்டுகளுக்கு மேலாகத் தன் இயல்பான நடிப்பால் முத்திரை பதித்து வரும் முன்னணி குணச்சித்திர நடிகையான சித்தாரா திருமணம் செய்துக் கொள்ளவில்லை.
இந்த லிஸ்ட்டில் நடிகை த்ரிஷாவும் இணைந்துள்ளார். நடிகர் ராணாவைக் காதலித்து, இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி, நிச்சயதார்த்தம் வரையில் சென்ற பிறகு, திருமணம் நின்றது. அதன் பின்னர் திருமண வாழ்க்கை குறித்து எந்த எண்ணமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார் நடிகை த்ரிஷா.
