பாஜகவை பார்த்து தவெக தலைவர் விஜய்க்கு பயமா? நயினார் நாகேந்திரன் விளாசல்!
Apr 15, 2025, 14:10 IST
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த மசோதாவை நிறைவேற்றியதற்காக பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த மசோதாவை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். ஒருவேளை இதனை மத்திய அரசு செய்யாவிடில் இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து அவர்களுடைய போராட்டத்தில் தமிழக வெற்றிக்கழகமும் இணையும் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு பாஜகவை பார்த்து பயமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது சரிவர தெரியவில்லை. விஜய் தொடர்ந்து அறிக்கை மூலமாக மட்டுமே பாஜகவை விமர்சித்து வருகிறார். இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
