நேபாள நிவாரண நிதிக்கு ஈஷா சார்பில் ரூ.1 கோடி - சத்குரு அறிவிப்பு!

 
நேபாள்

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, அங்குள்ள பேரிடர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

காத்மாண்டுவில் நடைபெற்ற ‘நேபாளத்துக்கு துணை நிற்போம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் சத்குரு, நடிகை மனிஷா கொய்ராலா மற்றும் ஈஷா அமைப்பைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

நேபாள்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகளுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த சத்குரு, மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ‘ஈஷா நேபாளம்’ சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாக உறுதியளித்து நிதியுதவியை அளித்தார்.

நேபாள்

இமயமலைப் பகுதியில் எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடர்களைச் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், 5 நாடுகள் அடங்கிய 'இமயமலை வாரியம்' ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.