2-வது டி20-யில் இஷான் கிஷன் விலகல்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
இஷான்

 

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் இஷான் கிஷன் பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

அவரது வலது தொடையின் உள் பகுதியில் லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். காயத்தில் இருந்து அவர் விரைவாகக் குணமடைய மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முக்கியமான போட்டிக்கு முன்பாக இஷான் கிஷன் விலகியிருப்பது இந்திய அணியின் வீரர் தேர்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அவர் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பாரா என்பது அவரது உடல்நிலை முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும்.