ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
Sep 5, 2026, 08:05 IST
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியப் படைத் தளபதி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நுக்பா சிறப்புப் படை கம்பெனி கமாண்டரான முஹம்மது மஹ்மூத் மர்ஷாத் அல்காதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

நுக்பா படையில் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த அல்காதி, ஹமாஸ் அமைப்பின் பல்வேறு சிறப்புப் படை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
